/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'நீக்கப்பட்ட, ஒத்துப்போகாத வாக்காளர்கள் மீண்டும் பட்டியலில் சேர ஆர்வம் இல்லை'
/
'நீக்கப்பட்ட, ஒத்துப்போகாத வாக்காளர்கள் மீண்டும் பட்டியலில் சேர ஆர்வம் இல்லை'
'நீக்கப்பட்ட, ஒத்துப்போகாத வாக்காளர்கள் மீண்டும் பட்டியலில் சேர ஆர்வம் இல்லை'
'நீக்கப்பட்ட, ஒத்துப்போகாத வாக்காளர்கள் மீண்டும் பட்டியலில் சேர ஆர்வம் இல்லை'
ADDED : ஜன 01, 2026 04:46 AM
ஈரோடு: நீக்கப்பட்ட, ஒத்துப்போகாத வாக்காளர்கள், மீண்டும் பட்டியலில் சேர ஆர்வம் காட்டவில்லை என, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த நவ., 4க்கு முன், 8 சட்டசபை தொகுதிகளில், 19 லட்சத்து, 97,198 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர்., படிவம் பெறப்பட்டு, கடந்த, 19ல் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், 16 லட்சத்து, 71,760 பேர் இடம் பெற்றனர்.நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், 1 லட்சத்து, 64,763 பேர், இறந்தவர்கள், 97,934 பேர், அடையாளம் கண்டறிய முடியாதோர், 49,250 பேர், 2 இடங்களில் வாக்காளர்களாக உள்ளோர், 13,127 பேர், பிற காரணங்கள், 355 பேர் என, 3 லட்சத்து, 25,425 நேர் நீக்கப்பட்டனர்.
கடந்த, 2002 வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப்போகாதவர்கள், 44,600 பேர் உள்ளனர். இந்த, 44,600 பேருக்கு மட்டும் மீண்டும் படிவம் வழங்கி, ஆவணங்கள் அடிப்படையில் விசாரித்து சேர்க்கும் பணி நடக்கிறது. தவிர, ஜன., 1 க்கு முன், 18 வயது பூர்த்தி ஆனவர்கள் புதிதாக சேர்க்கும் பணி படிவம் பெற்றும், ஆன்லைனிலும் நடக்கிறது.
இதற்காக கடந்த, 27, 28ல் சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் நடந்தும், முகாமில், 30,051 பேர் மட்டுமே படிவம் வழங்கினர். பிற நாட்கள், ஆன்லைனும் சேர்த்து, 33,000 படிவம் மட்டுமே பெறப்பட்டுள்ளன. அதேநேரம், பட்டியலில் நீக்கப்பட்ட, 3.25 லட்சம் பேரிடம் இருந்து எந்த எதிர்ப்பும், தங்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் வரவில்லை.
அரசியல் கட்சிகள் மட்டுமே, 3.25 லட்சம் பேரை நீக்கிவிட்டனர் என கூறுகின்றனர். பி.எல்.ஓ.,க்கள், பி.எல்.ஓ.,-2 என அலுவலர்கள், கட்சி பிரதிநிதிகளும் வீடுவீடாகவும், ஓட்டுச்சாவடி நிலையிலும் படிவம் பெற்றும், நீக்கப்பட்டவர்கள், ஒத்துப்போகாதவர்களிடம் ஆர்வமில்லை என்பதை மட்டுமே உணர முடிகிறது. எனவே பிப்., மாதம் வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில், பெரிய எண்ணிக்கையில் வாக்காளர் உயர்வு இருக்காது என, அதிகாரிகள் கூறினர்.

