/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை டவுன் பஞ்., கூட்டம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
சென்னிமலை டவுன் பஞ்., கூட்டம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னிமலை டவுன் பஞ்., கூட்டம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னிமலை டவுன் பஞ்., கூட்டம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : ஜன 01, 2026 04:47 AM

சென்னிமலை: -சென்னிமலை டவுன் பஞ்., வளர்ச்சி பணிகள் மற்றும் பொது நலன் சார்ந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில், சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூசத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ஜன., 31 முதல் பிப்., 6 வரை 7 நாட்களுக்கு தேவையான பொது சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகளை செய்ய தீர்மானிக்கப்பட்டது. விழா காலங்களில் தற்காலிக கடைகளுக்கான சுங்கம் வசூலித்தல் மற்றும் விளம்பரப்படுத்துதலுக்கான ஏலம் கோரவும் அனுமதி வழங்கப்பட்டது.
துாய்மை பணியாளர்களுக்கு தினமும் ஒரு வேளை காலை உணவு வழங்க தீர்மானிக்கப்பட்டது. சென்னிமலை - உப்பிலிபாளையம் ரோடு பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன மின்மயானத்தின் பராமரிப்பு பணிகளை, சொர்க்கம் அறக்கட்டளையிடம் ஒப்படைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது என்பன உள்பட, 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணைத் தலைவர் சவுந்தரராஜன், செயல் அலுவலர் மகேந்திரன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.