/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொண்டையில் சிக்கிய சேப்டி பின் அகற்றம்
/
தொண்டையில் சிக்கிய சேப்டி பின் அகற்றம்
ADDED : மே 10, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு பகுதியை சேர்ந்த, 48 வயதான ஆண் தொழிலாளி, சேப்டி பின்னை நேற்று மாலை வாயில் வைத்திருந்தபோது, எதிர்பாராமல் விழுங்கி விட்டார். தொண்டையில் சிக்கியதால் வலி தாங்க இயலாமல் துடித்தார்.
ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், காது, மூக்கு, தொண்டை நிபுணர் ஸ்ரீதர் தலைமையிலான குழுவினர், 30 நிமிடங்கள் போராடி, சேப்டி பின்னை வெளியே எடுத்தனர்.