ADDED : ஆக 08, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாநகராட்சிக்கு சொந்தமான மத்திய பஸ் ஸ்டாண்ட், காமராஜர் ரோடு வணிக
வளாகம், நேதாஜி வணி வளாகம் ஆகிய இடங்களில் கடைகள் வாடகைக்கு
விடப்பட்டுள்ளது.
இதில், 12 கடைக்காரர்கள் வாடகை செலுத்தாமல், 13.79
லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருந்தனர். நோட்டீஸ் அனுப்பியும் பலன்
இல்லாததால் ஆணையர் உத்தரவின்படி, 12 கடைகளுக்கும் மாநகராட்சி
அலுவலர்கள் சீல் வைத்தனர். இதில் நான்கு கடைக்காரர்கள்,
ஐந்து லட்சம் ரூபாய் செலுத்தியதால் சீல் அகற்றப்பட்டது. மீதி
கடைகளுக்கும் நிலுவை தொகை செலுத்தினால் கடை திறந்து விடப்படும் என்று,
மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
