/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாகனத்தை வாடகைக்கு எடுத்து நூதன மோசடி
/
வாகனத்தை வாடகைக்கு எடுத்து நூதன மோசடி
ADDED : பிப் 07, 2024 11:28 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் தனபால், பொது செயலாளர் கனகராஜ் ஆகியோர், ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம் அளித்த மனு:
சித்தோடு பகுதியில் நான்கு சக்கர வாகனங்களை, ஒப்பந்த அடிப்படையில் வாடகை தருவதாக கூறி ஏமாற்றி எடுத்து சென்று, மேட்டுப்பாளையத்தில் வாகனம் உடைப்பவர்களுக்கு விற்பது, விற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும்.
இவர்கள் சித்தோடு, சென்னிமலை மற்றும் அவிநாசி பகுதிகளில் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வாகனங்களை மாத வாடகைக்கு எடுத்து, போலியான பதிவு சான்று தயாரித்து, நிதி நிறுவனங்களில் காட்டி, கடன் பெற்றுள்ளனர்.
உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

