/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காலிங்கராயன் வாய்க்காலில் விரைவில் மராமத்து பணி
/
காலிங்கராயன் வாய்க்காலில் விரைவில் மராமத்து பணி
ADDED : மே 02, 2025 02:03 AM
ஈரோடு:
காலிங்கராயன் வாய்க்கால் மூலம் காலிங்கராயன்பாளையத்தில் இருந்து ஈரோடு, சாவடிபாளையம், ஊஞ்சலூர், கொடுமுடி ஆவுடையார்பாறை வரை, 15,743 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
இந்த பகுதிகளில் நெல், கரும்பு, மஞ்சள், வாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்கின்றனர். காலிங்கராயன் தடுப்பணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் முதல் போக பாசனத்திற்கு 120 நாட்களும், இரண்டாம் போகத்திற்கு, 120 நாட்களும் தண்ணீர் திறக்கப்படும். இரண்டாம் போக பாசனத்திற்கு கடந்த ஆண்டு டிசம்பர், 25 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, நேற்று முன்தினத்துடன் முழுமையாக வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது, வாய்க்காலில் தண்ணீர் வடிந்து வருகிறது.
நீர்வளத்துறை அலுவலர்கள் கூறுகையில், 'காலிங்கராயன் வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர், 120 நாட்கள் முழுமையாக திறக்கப்பட்டு, ஏப்.30ல் நிறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் தற்போது வாய்க்காலில் செல்கிறது. தண்ணீர் முழுமையாக வடிந்ததும், வாய்க்கால் தூர்வாரப்படும். மதகுகள், சேதமான பாலங்கள் சீரமைக்கப்படும். கலெக்டர் உத்தரவின்படி வாய்க்கால் அருகே ஓடும் பேபி கால்வாயும், 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரப்படும்' என்றனர்.