ADDED : பிப் 08, 2025 02:04 AM
ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் நடக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப். 5ல் நடந்த ஓட்டுப்பதிவில் 67.97 சதவீதம் ஓட்டு பதிவானது. இடைத்தேர்தலில் தற்போது வரை ஓட்டுப்பதிவு செய்த ஆண், பெண், மூன்றாம் பாலின வாக்காளர் எண்ணிக்கை, மொத்த எண்ணிக்கை விபரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஓட்டு எண்ணும் மையத்தில் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தி, படம் எடுக்க, போலீசார் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அனுமதிக்கவில்லை.
இதனால் நிருபர்கள், போட்டோ கிராபர்கள், வீடியோ கிராபர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அழைத்து பேசி சமரசம் செய்தார். இரண்டு மணி நேரத்திற்கு பின் தர்ணா முடிவுக்கு வந்தது.