/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க கோரிக்கை
/
முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க கோரிக்கை
முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க கோரிக்கை
முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க கோரிக்கை
ADDED : மார் 02, 2024 03:36 AM
நாமக்கல்: நாமக்கல்லில், தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சரவணகுமார் தலைமை வகித்தார். இதில், முதுநிலை வருவாய் ஆய்வாளராக தற்காலிக பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை, மாவட்ட வருவாய் அலுவலர் மேற்கொள்ள வேண்டும்.
முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையிலிருந்து, துணை தாசில்தாராக பதவி உயர்வு வழங்கப்பட்டதால், தற்போது, 10க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. மாவட்ட நிர்வாக நலன் கருதியும், தேர்தல் அவசரம் கருதியும் தகுதி பெற்ற இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் தட்டச்சர்களுக்கு உடனடியாக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இளநிலை வருவாய் ஆய்வாளர் காலியிடத்திற்கு, பதிவுறு எழுத்தர் நிலையிலிருந்து இளநிலை வருவாய் ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்க வேண்டும். அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் காலியிடங்களை நிரப்ப வேண்டும்.
மேலும், திருச்செங்கோடு மற்றும் ப.வேலுார் தாலுகா அலுவலகங்களில் தேர்தல் பிரிவில் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக இளநிலை உதவியாளர்களாக பணிபுரிந்த பூங்கொடி, சங்கீதா ஆகியோருக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட துணைத்தலைவர்கள் தங்கம், சிவக்குமார், சந்தோஷ்குமார், மதுமதி, மாவட்ட செயலாளர் சதீஸ்குமார், பொருளாளர் பாலசுப்பிரமணியம், அமைப்பு செயலாளர் விஜயகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

