தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கழிவு பொருட்களை அகற்ற கோரிக்கை

கழிவு பொருட்களை அகற்ற கோரிக்கை

கழிவு பொருட்களை அகற்ற கோரிக்கை


ADDED : நவ 03, 2024 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 03, 2024 01:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கழிவு பொருட்களை அகற்ற கோரிக்கை

கரூர், நவ. 3-

சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள, கழிவு பொருட்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கரூர் மாவட்டம் கோதுார், குப்புச்சிபாளையம், மாங்காசோழிபாளையம், கள்ளிப்பாளையம், ஆத்துார் பகுதிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம், டெக்ஸ்சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள

டைல், பஸ் பாடி நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. கரூர் மற்றும் வெங்கமேடு பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் சேகரமாகும் கழிவுகளை, கோதுார் சாலையின் இருபுறமும் கொட்டி செல்கின்றனர். பஸ் பாடி கட்டும் நிறுவனங்களில் இருந்து கழிக்கப்பட்ட மரப்பலகை, கண்ணாடி துண்டு, பிளாஸ்டிக் பொருட்களையும் கொட்டி செல்கின்றனர்.

மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு வரும் குடிமகன்களும், சாலை ஓரத்தில் குடித்து விட்டு, மதுபாட்டில்களை அங்கேயே வீசி விடுகின்றனர். இதுமட்டுமின்றி, சாலையில் சேரும் குப்பைகளை அகற்றாமல், அப்படியே தீயிட்டு கொளுத்தி விடுகின்றனர். இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பதால், வாகன ஓட்டிகள் கண் எரிச்சலால் அவதிப்படுகின்றனர்.

எனவே, சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள கழிவு பொருட்களை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us