/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'வாய்க்கால் சீரமைப்பு பணியில் அரசியல் செய்யாமல் விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டுகோள்'
/
'வாய்க்கால் சீரமைப்பு பணியில் அரசியல் செய்யாமல் விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டுகோள்'
'வாய்க்கால் சீரமைப்பு பணியில் அரசியல் செய்யாமல் விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டுகோள்'
'வாய்க்கால் சீரமைப்பு பணியில் அரசியல் செய்யாமல் விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டுகோள்'
ADDED : ஆக 22, 2024 03:42 AM
ஈரோடு: வாய்க்கால் சீரமைப்பு பணியில், அரசியல் செய்யாமல் விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் கூறினர்.
ஈரோடு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகமது குதுரத்துல்லாவிடம், கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்க தலைவர் பெரியசாமி, செயலாளர் பொன்னையன், கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் ராமசாமி, செயலாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மனு வழங்கி கூறியதாவது:
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம், 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. இந்த மண் வாய்க்காலை சீரமைக்க உலக வங்கி, 706 கோடி ரூபாய் வழங்கியது. ஆனால், அரசு வழங்கிய தொழில் நுட்பம், திட்ட வரைவின்படி தேவை அடிப்படையிலும் பராமரிப்பு பணி நடக்காமல், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், விவசாயிகளின் விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் பணி நடந்தது. இதனால், கடந்த சில ஆண்டுகளாக அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்த, முதல், 3 நாட்களில் எங்காவது உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நிறுத்தப்படுகிறது.
இதனால், பாசன நீர் கிடைக்காமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கின்றனர். விவசாய பரப்பு குறைகிறது. இதுபற்றி அரசு கவலைப்படவில்லை. கடந்த, 15ல் தண்ணீர் திறக்கப்பட்டு கடந்த இரு நாட்களுக்கு முன்பு நல்லாம்பட்டியில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. முறைப்படி சீரமைப்பு பணி செய்யாததால்தான் தற்போது உடைப்பு ஏற்பட்டுள்ளது. வாய்க்கால் சீரமைப்பு பணியில் அரசியல் செய்யாமல், தரமாக, திட்டத்தில் உள்ளபடி பணிகளை மேற்கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் பாசன நீரை நிறுத்தாத வகையில், பராமரிப்பு பணிகளை செய்ய திட்டமிட வேண்டும். தடையின்றி விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் நிறுத்தப்படும் காலத்தில், முறையான சீரமைப்பு பணிகளை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.