/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் கழிப்பிடத்தில் ஆண், பெண் உருவம் வரைய கோரிக்கை

ADDED : நவ 12, 2024 01:46 AM
காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் கழிப்பிடத்தில்
ஆண், பெண் உருவம் வரைய கோரிக்கை
காங்கேயம், நவ. 12-
காங்கேயம் பஸ் ஸ்டாண் வளாகத்தில், நகராட்சி சார்பில் கட்டணமில்லா இலவச கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. பணம் வசூலித்து கொண்டு உள்ளே அனுப்பும் இந்த நாளில், இலவசமாக கட்டியிருப்பதற்கு, மக்கள் மத்தியில் பாராட்டு கிடைத்துள்ளது. ஆனால், இதில் சிறு குறை உள்ளது. அதாவது கழிப்பறைக்கு செல்லும் வழியில் ஆண்கள், பெண்கள் என்று எழுத்தால் குறிப்பிட்டுள்ளனர். இதனால் படிக்கத் தெரியாத பலர், வெளியில் வருவோரை உறுதி செய்து அல்லது யாரிடமாவது கேட்டு, உள்ளே நுழையும் நிலை உள்ளது. அவசரத்துக்கு செல்லும் போது, விபரம் எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க முடியாதுதான். ஆனால், மாற்றி நுழைந்து விட்டால் வில்லங்கம் ஆகிவிடுமே? எனவே கழிப்பறைக்கு செல்லும் வழியில் ஆண், பெண் என்று குறிப்பிட்டுள்ள இடத்தில், உருவப்படத்தையும் வரைந்தால் படிக்காத பாமரர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.