/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விசைத்தறி கூடங்களுக்கு மின் கட்டண உயர்வில் விலக்கு அளிக்க வேண்டுகோள்
/
விசைத்தறி கூடங்களுக்கு மின் கட்டண உயர்வில் விலக்கு அளிக்க வேண்டுகோள்
விசைத்தறி கூடங்களுக்கு மின் கட்டண உயர்வில் விலக்கு அளிக்க வேண்டுகோள்
விசைத்தறி கூடங்களுக்கு மின் கட்டண உயர்வில் விலக்கு அளிக்க வேண்டுகோள்
ADDED : ஜூன் 27, 2025 01:01 AM
ஈரோடு, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ், பொருளாளர் பாலசுப்பிரமணியம், கோவை மண்டல பொறுப்பாளர் எம்.பாலசுப்பிரமணியம் உட்பட நிர்வாகிகள், சென்னையில் மின் துறை அமைச்சர், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் பொன்னையா, கைத்தறி மற்றும் துணி நுால் துறை முதன்மை செயலர், ஆணையர் ஆகியோரை சந்தித்து மனு வழங்கினர். அதில்
கூறியதாவது:
வரும் ஜூலை மாதம் உயர்த்தப்படும் மின் கட்டண உயர்வில் இருந்து, விசைத்தறி கூடங்களுக்கு முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும். விசைத்தறி கூடங்களில் 'நெட் மீட்டருடன் கூடிய சோலார் பேனல்' அமைத்து, மின் உற்பத்தி மேற்கொள்ள மானியம் வழங்க வேண்டும். இக்கோரிக்கையை முதல்வரிடம் தெரிவித்து, பரிசீலிக்க வேண்டும்.
தவிர, கிராமப்புற பகுதிகள், பஞ்.,களில் விசைத்தறி கூடங்களுக்கு அதிகப்பட்சமாக சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான உயரிய வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும்.
இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கான பாவு நுால் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், விசைத்தறிகளில் பணி துவங்கவில்லை. உடன் பாவு வழங்கி, இலவச வேட்டி, சேலை உற்பத்தியை துவங்க
வேண்டும்.
விசைத்தறிகளை நவீனப்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், வழங்கப்படாமல் உள்ளது. அதை விரைவாக வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
ஈரோடு சந்தைக்கு
மாடுகள் வரத்து அதிகரிப்பு