/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வட்டமலைகரை ஓடை அணைக்கு அமராவதி தண்ணீர் ஆய்வு முடிந்த நிலையில் நடைமுறைப்படுத்த கோரிக்கை
/
வட்டமலைகரை ஓடை அணைக்கு அமராவதி தண்ணீர் ஆய்வு முடிந்த நிலையில் நடைமுறைப்படுத்த கோரிக்கை
வட்டமலைகரை ஓடை அணைக்கு அமராவதி தண்ணீர் ஆய்வு முடிந்த நிலையில் நடைமுறைப்படுத்த கோரிக்கை
வட்டமலைகரை ஓடை அணைக்கு அமராவதி தண்ணீர் ஆய்வு முடிந்த நிலையில் நடைமுறைப்படுத்த கோரிக்கை
ADDED : ஜூன் 30, 2025 04:20 AM
காங்கேயம்: வெள்ளக்கோவில் அருகே உள்ள வட்டமலைகரை ஓடை அணைக்கு அமராவதி தண்ணீர் கொண்டுவரும் வழித்தடம் குறித்து நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் திட்டத்தை விரைவாக நடைமுறைக்கு கொண்டுவந்து பணிகள் துவக்கவேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளக்கோவில் அருகே வட்டமலைக்கரையில், 700 ஏக்கர் பரப்பளவில், 26 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கும் வகையில், 1980ல் அணை கட்டப்பட்டது. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் வகையில் வாய்க்கால் வெட்டப்பட்டது. பி.ஏ.பி., பாசன கால்வாய் கசிவு நீர் மற்றும் பல்லடம், பொங்கலுார், அனுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையால், 350 சதுர மைல் பரப்பு நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து சேகரமாகும் நீர், அணையில் தேக்கும் வகையில் கட்டப்பட்டது. பி.ஏ.பி., அணைகளில் உபரியாக நீர் இருக்கும் பட்சத்தில், ஒவ்-வொரு ஆண்டும் தொடர்ந்து, 15 நாட்களுக்கு, 250 கன அடி வீதம், பல்லடம் அருகே கள்ளிபாளையம் ஷட்டரில் இருந்து, அணைக்கு நீர் திறக்கவும் அரசாணை உள்ளது.
இதன்படி திருமூர்த்தி அணையின் மூலம் பி.ஏ.பி., கால்வாயில் உள்ள கள்ளிபாளையம் ஷட்டரில் இருந்து தண்ணீர் திறக்க விவ-சாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து கடந்த, 2021ல் தண்ணீர் திறக்கப்பட்டு அணை நிரம்பியது. கடந்த ஜன., 9ம் தேதி மீண்டும் ஆழியாறு பாசன திட்டத்தில் இருந்து, 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் சுற்று வட்டார கிராம விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறு-களில் நீர்மட்டம் உயர்ந்தது.
அணையை அமராவதி ஆற்றுடன் இணைப்பது குறித்து ஆய்வு செய்ய, 2021ல், 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதைய-டுத்து, 2023ல் தண்ணீர் வரும் வழித்தடங்களை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.
இதில் அமராவதி ஆறு அக்கரப்பாளைத்தில் இருந்து ஆண்டிபா-ளையம், பசுபதிபாளையம், ஊஞ்சவலசு வழியாக அணையின் பின் பகுதியில் தண்ணீர் சேர்ப்பதும், அணைப்பாளையத்தில் இருந்து வெள்ளியம்பாளையம், செட்டிபாளையம் வழியாக அணைக்கு தண்ணீர் கொண்டு வரவும், கம்பளியம்பட்டியில் இருந்து, 4.2 கி.மீ., கடந்து அணைக்கு தண்ணீர் கொண்டு சேர்ப்-பது என வழித்தடங்களை ஆய்வு
செய்தனர்.
இதற்கான திட்ட மதிப்பீடு, ஆகும் செலவு, தேவைப்படும் மின் அளவு, மோட்டார் திறன், விரைவாக செய்து முடிக்க முடியும் காலம் குறித்தும் ஆய்வு செய்தனர். இதற்கு, 150 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு ஆகும் என அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதில் மின் மோட்டார் அமைத்தல், மின் கட்டணத்தை விவசாயிகள் ஏற்க ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மாற்றாக சோலார் அமைக்கலாம் அல்லது அரசே செல-வுகளை ஏற்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆய்வுக்குப் பிறகு அடுத்தகட்ட பணி எதுவும் நடக்கவில்லை. திட்டத்தை அமல்படுத்தி அமராவதி ஆற்றில் இருந்து அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து நிரந்தர தீர்வு விவசாயிகள்
எதிர்பார்க்கின்றனர்.