/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை
/
நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை
ADDED : செப் 13, 2025 01:27 AM
டி.என்.பாளையம், அரக்கன்கோட்டை பாசனத்தில், வரும், 19ம் தேதி முதல், நெல் அறுவடை துவங்கி விடும். வதால் அதற்குள் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கொடிவேரி அணைக்கட்டு திட்டம், அரக்கன்கோட்டை வாய்க்கால் முறை நீர் பாசன விவசாய சங்க செயலாளர் முருகேஷ் சஞ்சீவ் கூறியதாவது: கொடிவேரி அணையிலிருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்கால் பாசனத்துக்கு கடந்த மே, 26ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு, நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது நெற்கதிர் முற்றிய நிலையில் செப்., மூன்றாவது வாரத்தில் நெல் அறுவடைக்கு வந்துவிடும். அதற்குள் அரசின் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டும்.
குறிப்பாக கள்ளிப்பட்டி, கொண்டையம்பாளையம், பெருமுகை பகுதிகளில் அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ளதால், கடந்த காலங்களை போலவே மூன்று கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். இந்த முறை டி.பி.எஸ்.-5 என்ற குண்டு ரகம் அதிகம் பயிரிடப்பட்டுள்ளது.
இது ஏக்கருக்கு, 3,600 கிலோ வரை விளைச்சல் வரக்கூடும். எனவே நுகர்பொருள் வாணிப கழகத்தில், விவசாயிகள் நெல்லை எடை போடும் போது ஏக்கர் ஒன்றுக்கு, 90 சிப்பம் அளவு இருக்குமாறு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
முதலில் இரண்டு நேரடி கொள்முதல் நிலையத்தை, ௧௯ம் தேதியும், மூன்றாவது கொள்முதல் நிலையத்தை, 25ம் தேதிக்குள்ளும் திறக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.