/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எஸ்.ஐ., மீது பைக்கை மோதியவருக்கு காப்பு
/
எஸ்.ஐ., மீது பைக்கை மோதியவருக்கு காப்பு
ADDED : ஆக 03, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி போக்குவரத்து போலீசில் எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் தண்டபாணி, 52; கடந்த, ௩1ம் தேதி மாலை கோபி எம்.ஜி.ஆர்., சிலையருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பைக்கில் வேகமாக வந்த நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை சேர்ந்த சின்னசாமி, 50, மோதியதில், எஸ்.ஐ., தண்டபாணி பலத்த காயமடைந்தார். எஸ்.ஐ., புகாரின்படி, சின்னசாமியை கோபி போலீசார் கைது செய்தனர்.