/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துபடி முன்பதிவு துவக்கம்
/
ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துபடி முன்பதிவு துவக்கம்
ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துபடி முன்பதிவு துவக்கம்
ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துபடி முன்பதிவு துவக்கம்
ADDED : டிச 03, 2024 01:23 AM
நாமக்கல், டிச. 2-
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், 2025ம் ஆண்டுக்கான வடைமாலை சாத்துபடி முன்பதிவு, நேற்று துவங்கியது.
நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்கிறது. தினமும் காலை, 9:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு, 1,008 வடை மாலை அலங்காரம் செய்யப்படும். தொடர்ந்து பல்வேறு அபிஷேகம் செய்யப்படும். இந்த இரண்டும் கட்டளைதாரர் மூலம் நடக்கிறது.இந்நிலையில், ௨௦௨௫ம் ஆண்டுக்கான முன்பதிவு கோவில் வளாகத்தில் நேற்று துவங்கியது.
ஒரு நாளில், தலா, 7,000 ரூபாய் செலுத்தி, ஆறு பேர் அபிஷேகத்துக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது ஒருவரே, 42,000 ரூபாய் செலுத்தியும் கட்டளை செய்யலாம். முதல் நாளான நேற்று, 47 நாட்களுக்கான வடமாலை சாத்துபடி, அபிஷேக முன் பதிவு முடிந்தது.