/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புறம்போக்கு வண்டிப்பாதை நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு
/
புறம்போக்கு வண்டிப்பாதை நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு
புறம்போக்கு வண்டிப்பாதை நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு
புறம்போக்கு வண்டிப்பாதை நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு
ADDED : ஜன 20, 2024 07:40 AM
அந்தியூர் : அந்தியூர் யூனியன் வேம்பத்தி பஞ்., கூலிவலசில், 200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் அரசு புறம்போக்கு வண்டிப்பாதையை, நில அளவீடு செய்ய, தோட்டம் வைத்திருக்கும் சில விவசாயிகள், வருவாய் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
இதன்படி அந்தியூர் தாசில்தார் பெரியசாமி தலைமையிலான வருவாய் துறையினர் வந்தனர். அவர்கள் பொக்லைன் இயந்திரத்தையும் கொண்டு வந்ததால், அப்பகுதியினர் சந்தேகம் அடைந்தனர். இதனால் தாசில்தார் உள்ளிட்டோரை, 50க்கும் மேற்பட்டடோர் முற்றுகையிட்டனர். புறம்போக்கு வண்டிப்பாதை சர்வே செய்யும் பகுதியில், அரசு பள்ளிகள் உள்ளன. எனவே நில அளவீடும் செய்யக்கூடாது என மக்கள் கூறினர்.
வருவாய் அதிகாரிகளோ, அரசு கட்டடங்களை இடிக்க மாட்டோம். வண்டிப்பாதையை மட்டும் அளவீடு செய்து, செடி, கொடிகளை மட்டுமே அகற்றுவோம் என்றனர். ஆனாலும், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, அதிகாரிகள் திரும்பி சென்றனர்.