/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் நகராட்சியில் 32 தீர்மானம் நிறைவேற்றம்
/
காங்கேயம் நகராட்சியில் 32 தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : ஜன 01, 2025 01:16 AM
காங்கேயம், ஜன. 1-
காங்கேயம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் சூரியபிரகாஷ் தலைமை வகித்தார். கமிஷனர் பால்ராஜ், துணைத்தலைவர் கமலவேணி முன்னிலை வகித்தனர்.
நகராட்சி பகுதியில் சாலையோர வியாபாரிகள், நகராட்சி சட்ட விதி அடிப்படையில், தங்கள் கடைகளை அமைத்துக் கொள்ளலாம். இதற்கு நகராட்சிக்கு வரி செலுத்த வேண்டும். நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் முட்புதர்களை வெட்டி அகற்ற இயந்திரம் வாங்க வேண்டும். அலுவலகத்திற்கு தேவையான டோனர் மற்றும் எழுது பொருள் வாங்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க புகை அடிக்கும் இயந்திரம் இரண்டு வாங்க வேண்டும் என்பது உள்பட 32 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.