/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தென்னை கயிறு மிதியடி, தரை விரிப்புகளை அலுவலகங்களில் பயன்படுத்த கோரி தீர்மானம்

ADDED : டிச 27, 2024 01:03 AM
சென்னிமலை, டிச. 27-
தென்னை நார் சார்ந்த தொழிலை ஊக்குவிக்க, தமிழக அரசு கோவையை தலைமையிடமாக கொண்டு, தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த அமைப்பின் 21 மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட பொதுக்குழு கூட்டம், சென்னிமலையில் நடந்தது.
சங்கத் தலைவர் பூச்சாமி தலைமை வகித்தார். பல்லடம் செல்வகுமார் சோலார் திட்ட விளக்கம் குறித்து பேசினார். நிர்வாகிகள் தனசேகர், சேது, பொருளாளர் மல்கர் சாய்பு ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், மின் கட்டண உயர்வு காரணமாக தென்னை நார் சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டதால் அதற்கு, 112 கிலோ வாட்ஸ் வரை சூரிய சக்தி மின் உற்பத்தி செய்ய அரசு, 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். தென்னை நார் சார்ந்த கயிறு மிதியடிகள், கயிறு மெத்தைகள், தரை விரிப்புகள் உள்ளிட்ட பொருட்களை அரசு அலுவலகங்களில் பயன்படுத்த அரசு உத்தரவிட வேண்டும்.
தென்னை நார் சார்ந்த தொழிலை வளர்ச்சி அடைய செய்ய, தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்திற்கு இந்தாண்டு சிறப்பு நிதியாக, 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயலாளர் அருண் நன்றி கூறினார்.