/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., தேர்தல் அறிக்கையை அமலாக்க கோரி தீர்மானம்
/
தி.மு.க., தேர்தல் அறிக்கையை அமலாக்க கோரி தீர்மானம்
தி.மு.க., தேர்தல் அறிக்கையை அமலாக்க கோரி தீர்மானம்
தி.மு.க., தேர்தல் அறிக்கையை அமலாக்க கோரி தீர்மானம்
ADDED : டிச 28, 2024 02:33 AM
ஈரோடு: ஈரோட்டில், ஓய்வூதியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கி-ணைப்பு குழு சார்பில், தேசிய ஓய்வூதியர் தின சிறப்பு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். அஞ்சல் ஊழியர் சங்க ஓய்வூதியர் கோட்ட செயலாளர் ராமசாமி முன்-னிலை வகித்தார். ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் சின்னசாமி வரவேற்றார். பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் பரமசிவம் பேசினார்.
'டிச.,-17, நகரா தீர்ப்பு, பென்ஷன் அபாயம், நமது கடமை' போன்ற தலைப்புகளின் கீழ், பி.எச்.ஈ.எல்., ஊழியர் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் அன்வர் உசேன் பேசினார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். 8 வது ஊதியக்குழுவை உடன் அமைக்க வேண்டும். பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்களுக்கு ஜன., 2017 முதல் ஓய்வூதிய மாற்றம் செய்ய வேண்டும். 65 வயது முதல் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண கட்டண சலுகை வழங்க வேண்டும்.
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு, 109 மாதங்களாக வழங்கப்ப-டாத பஞ்சப்படியை உடன் வழங்க வேண்டும். அவர்களுக்கான ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன.