/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்தியமங்கலம் புதிய மாவட்டம் அமைப்புகள் சார்பில் தீர்மானம்
/
சத்தியமங்கலம் புதிய மாவட்டம் அமைப்புகள் சார்பில் தீர்மானம்
சத்தியமங்கலம் புதிய மாவட்டம் அமைப்புகள் சார்பில் தீர்மானம்
சத்தியமங்கலம் புதிய மாவட்டம் அமைப்புகள் சார்பில் தீர்மானம்
ADDED : ஆக 25, 2025 02:34 AM
புன்செய்புளியம்பட்டி: சத்தியமங்கலத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலி-யுறுத்தி, சத்தியமங்கலம் மாவட்ட கோரிக்கை இயக்கம் சார்பில், புன்செய்புளியம்பட்டியில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்-தது.
டாக்டர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். அ.தி.மு.க., - தி.மு.க., காங்., - பா.ஜ., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி நிர்வா-கிகள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், பொதுநல அமைப்பினர் கலந்து கொண்டனர். சத்தியமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தாளவாடி, இரும்பறை, டி.என்.பாளையம், கடம்பூர் பகுதிவாரி-யாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த வேண்டும். இதற்காக விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள், அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், சமூக நல இயக்கங்களிடம் ஆதரவு திரட்ட
வேண்டும்.
இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட முக்கிய கருத்துகளை திரட்டி மனு தயார் செய்து மக்களின் கையொப்பத்துடன், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசுக்கு கோரிக்கை வைப்பது என தீர்-மானம் நிறைவேற்றப்பட்டது.

