/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
1,008 விநாயகர் சிலை அமைக்க தீர்மானம்
/
1,008 விநாயகர் சிலை அமைக்க தீர்மானம்
ADDED : ஆக 11, 2025 08:15 AM
ஈரோடு: விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்து, மாநகர் மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட பொது செயலாளர் கார்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரமேஷ், கொடுமுடி கார்த்தி, வக்கீல் முரளி, கவின், தேவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநில பொது செயலாளர் கிஷோர் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநகர் மாவட்டத்தில், 1,008 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும். விளையாட்டு போட்டி, திருவிளக்கு பூஜை, கலை நிகழ்ச்சி, சொற்பொழிவு உட்பட பல நிகழ்ச்சி நடத்த வேண்டும் என தீர்மானித்தனர்.
தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிக்கும் தமிழக அரசு, காவிரி கரையோரம் சோளீஸ்வரர் கோவில் அருகே மசூதி கட்ட எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றினர்.