/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு' உருவாக்க தீர்மானம்
/
'புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு' உருவாக்க தீர்மானம்
'புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு' உருவாக்க தீர்மானம்
'புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு' உருவாக்க தீர்மானம்
ADDED : செப் 17, 2024 07:29 AM
சத்தியமங்கலம்: தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (என்.டி.சி.ஏ.,), கடந்த ஜூன் மாதம், நாடு முழுவதுமுள்ள, 54 புலிகள் காப்பகங்கள் அமைந்துள்ள மாநிலங்களின் தலைமை செயலர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், 'நாட்டில், 54 புலிகள் காப்பகத்தில் உள்ள, 591 கிராமங்களை சேர்ந்த, 64,801 குடும்பங்களை வெளியேற்றி, மறு குடியமர்த்த வேண்டும். இதற்கான பணிகளை உடனடியாக துவக்க வேண்டும்' என தெரிவித்திருந்தது. இந்த பட்டியலில் தமிழகத்தில் உள்ள ஐந்து புலிகள் காப்பகங்களில் வசிக்கும், 4,113 குடும்பங்களும் அடங்கும்.இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், 10 கிராமங்களில், 656 குடும்பங்கள் வசிக்கின்றன. மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து, இப்பகுதி மக்கள் போராட்டத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சத்தி இ.கம்யூ., அலுவலகத்தில், சத்தி புலிகள் காப்பக கிராம பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் தலைமை வகித்தார்.
தாளவாடி, ஆசனூர், தலமலை, கடம்பூர் மலைப்பகுதி கிராம பிரதிநிதிகள் மற்றும் முதுமலை, ஆனைமலை புலிகள் காப்பக பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.மத்திய அரசு தனது உத்திரவை திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு இந்த உத்தரவை நிராகரிக்க வேண்டும். புலிகள் காப்பக மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் பொருட்டு, 'புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு' பெயரில் அனைத்து தரப்பு மக்கள் -இயக்கங்களை இணைத்து இதுகுறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சத்தி புலிகள் காப்பகத்தில் உள்ள, 200க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் கிராமங்களின் கிராமசபைகளை கூட்டி, வன உரிமைச் சட்டப்படி தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

