ADDED : நவ 16, 2024 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: நல்லிணக்க உறவு மேம்படும் வகையில், தமிழக கோவில்களி-லிருந்து இதர மாநில கோவில்களுக்கு வஸ்திர மரியாதை வழங்க-பட்டு வருகிறது.
இதன்படி சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்-ணாரி மாரியம்மன் கோவில் சார்பில், கர்நாடக மாநிலம் மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு, கடந்த மாதம் வஸ்திர மரியாதை செய்யப்பட்டது.இந்நிலையில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் சார்பில், பண்-ணாரி அம்மனுக்கு நேற்று பட்டு புடவை, மஞ்சள், குங்குமம், வளையல்கள் பழ வகைகள், பூமாலைகள் என, 11 தட்டுகளுடன் வஸ்திர மரியாதை செய்யப்பட்டது.

