/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓய்வு அரசு பள்ளி ஆசிரியை விபரீத முடிவு
/
ஓய்வு அரசு பள்ளி ஆசிரியை விபரீத முடிவு
ADDED : அக் 21, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, பெரியசேமூர், வேலன் நகரை சேர்ந்த மகுடேசன் மனைவி சாந்தி, 56; அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றினார். இவரது மூத்த மகள் சரண்யா, இரண்டு ஆண்டுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் விருப்ப ஓய்வு பெற்று, மகளின் இரு குழந்தைகளை வீட்டில் இருந்து கவனித்து வந்தார். சில மாதங்களுக்கு முன் சரண்யாவின் கணவர், குழந்தைகளை அழைத்து சென்றார்.
ஏற்கனவே மகளை இழந்த வேதனையில் இருந்தவர், பேரக்குழந்தைகளும் சென்று விட்டதால் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

