/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வருவாய் துறை அலுவலர் 6ம் நாளாக வேலை நிறுத்தம்
/
வருவாய் துறை அலுவலர் 6ம் நாளாக வேலை நிறுத்தம்
ADDED : மார் 05, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தால் பாதிக்கப்பட்ட பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணி இறக்க பாதுகாப்பு அரசாணையை வெளியிடுதல் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் ஆறாவது நாளாக நேற்றும் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது.
இதன்படி மாவட்டத்தில் உள்ள, 10 தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக ஊழியர் என, 400க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தை தொடர்கின்றனர்.

