/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பணியை புறக்கணித்து வருவாய் துறை அலுவலர் போராட்டம்
/
பணியை புறக்கணித்து வருவாய் துறை அலுவலர் போராட்டம்
ADDED : நவ 27, 2024 06:47 AM
ஈரோடு: தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர், நேற்று முதல் பணி புறக்கணிப்புடன், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமையிலும், ஈரோடு தாலுகா அலுவலகத்தில் வட்ட கிளை செயலாளர் இத்திரிஸ் தலைமையில் ஈடுபட்டனர்.
இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசாணையை வெளியிட வேண்டும். வருவாய் துறையில் பல்வேறு பணியிடங்களை கலைக்க அரசு திட்டமிடுவதை நிறுத்த வேண்டும். பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட, 97 பணியிடங்களை உடன் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
மாவட்ட அளவில் கலெக்டர் அலுவலகம், 10 தாலுகா அலுவலகம் என, 11 இடங்களில் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இதில், 52 தாசில்தார், 60 துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் நிலையில், 300 பேர் உட்பட, 444 பேர் நேற்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். போராட்டத்தால் தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம் பூட்டினர். பல்வேறு பணிகளுக்காக வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பவானியில் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சித்ரா தலைமையில் போராட்டம் நடந்தது. அந்தியூர் தாலுகா அலுவலகத்தில், 25க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.