/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
/
வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
ADDED : டிச 07, 2025 09:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கமித்திரை தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சதீஷ்குமார், செயற்பொறியாளர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மோகனசுந்தரம், ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

