ADDED : அக் 16, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள கெட்டிசமுத்திரம், எண்ணமங்கலம் ஏரி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக பர்கூர் கிழக்கு மலை, வரட்டுப்பள்ளம், வெள்ளித்திருப்பூர் சுற்று வட்டாரத்தில் மிதமானது முதல் கனமழை பெய்தது.
இதனாலும், பர்கூர் கிழக்கு மலையில் பெய்த மழைநீர் மற்றும் காட்டாற்று வெள்ளம், செலம்பூரம்மன் கோவில் பள்ளத்தின் வழியாக பாய்ந்தோடி எண்ணமங்கலம் ஏரிக்கு செல்கிறது. இதனால் எண்ணமங்கலம் ஏரி நீர்மட்டம், ௬ அடியில் இருந்து, 48 அடியாக நேற்று உயர்ந்துள்ளது. இதேபோல் கெட்டிசமுத்திரம் ஏரி நீர்மட்டம், 33 அடியாக எகிறியது.