/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தடுப்பு சுவர் இல்லாததால் பாலத்தில் விபத்து அபாயம்
/
தடுப்பு சுவர் இல்லாததால் பாலத்தில் விபத்து அபாயம்
ADDED : அக் 21, 2024 07:22 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 15வது வார்டு அன்னை சத்யா நகர்- மல்லி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அன்னை சத்யா நகர்- மல்லி நகர் இடையே, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை மீது பாலம் உள்ளது. ஈரோடு - சித்தோடு ரோடு சூளையில் இருந்து, பவானி ரோட்டில் உள்ள அசோகபுரத்துக்கு செல்லும் பாலமாகவும் உள்ளது. அதிக போக்குவரத்து நடக்கும் பாலத்தின் இருபக்கமும் தடுப்புச்சுவர் இல்லாததால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக இரவில் விபத்து அபாயம் அதிகம் உள்ளது. பாலத்தின் இருபக்கமும் தடுப்புச்சுவர் கட்ட, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

