/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இறைச்சி கடைகளால் நோய் பரவும் அபாயம்
/
இறைச்சி கடைகளால் நோய் பரவும் அபாயம்
ADDED : மே 26, 2025 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நாளில், பிரதான சாலையோரங்களில் மீன் வியாபாரம் நடக்கிறது.
விற்பனை முடிந்ததும் கழிவை அருகிலுள்ள சாக்கடை மற்றும் சாலையோரங்களில் கொட்டி செல்கின்றனர். இதனால் துர்நாற்-றமும் வீசுவதுடன், கழிவுகளில் இருந்து ஈக்கள் பரவி, நோய் பரவும் அபாயம் உள்ளது. சத்தி சாலை, மாதம்பாளையம் சாலை, பவானிசாகர் சாலை, அரசு மருத்துவமனை முன் என பல்-வேறு இடங்களில் மீன் கடைகள் அதிகம் அமைக்கப்படுகின்றன. கழிவை முறையாக அகற்ற வலியுறுத்தி, சுகாதாரக்கேடு ஏற்படுத்-துவோர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.