/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேட்பு மனு குழப்பத்துக்காக ஆர்.ஓ., மாற்றம் ஓசூர் மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு
/
வேட்பு மனு குழப்பத்துக்காக ஆர்.ஓ., மாற்றம் ஓசூர் மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு
வேட்பு மனு குழப்பத்துக்காக ஆர்.ஓ., மாற்றம் ஓசூர் மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு
வேட்பு மனு குழப்பத்துக்காக ஆர்.ஓ., மாற்றம் ஓசூர் மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு
ADDED : ஜன 23, 2025 06:27 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு பரிசீல-னையில், குழப்பம் ஏற்படுத்தி, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட தாமதமானதால், தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் மாற்றப்பட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 58 வேட்பாளர்கள், 65 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். கடந்த, 18ல் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் மணீஷ் தலைமையிலான பரிசீலனையில், மூன்று மனு தள்ளுபடி-யானது. கடந்த, 20ல் மனுவை திரும்ப பெறும்போது மதியம், 3:00 மணிக்குள், 8 பேர் திரும்ப பெற்றனர். பின், 47 வேட்பாளர்க-ளுக்கு சின்னம் ஒதுக்கீடு நடந்தபோது, கர்நாடகாவை சேர்ந்த பத்-மாவதி என்ற வேட்பாளர், அம்மாநில வாக்காளராக இருப்ப-தாலும், சட்டசபை தேர்தல் விதிப்படி அவர் தமிழகத்தில் போட்-டியிட இயலாது என்றும், அவருக்கு சின்னம் ஒதுக்கக்கூடாது என, சுயேட்சைகள் போர்க்கொடி உயர்த்தினர்.
தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் உட்பட தேர்தல் பிரிவினர், அம்மனு முற்றிலும் கர்நாடகாவை சேர்ந்தவர்களால் தாக்கலானது என்பதை கவனிக்காததால், மாலை, 5:00 மணிக்கு இறுதி வேட்-பாளர் பட்டியல் அறிவிக்க வேண்டிய நிலை மாறி, நள்ளிரவு, 3:30 மணிக்கு தேர்தல் ஆணைய உத்தரவு பெற்று, பத்மாவதி மனுவை நிராகரித்து இறுதி பட்டியல் வெளியிட்டனர். தற்போதைய நிலையில், 46 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். குளறுப-டிக்கு மணீஷ் மற்றும் அதிகாரிகள் காரணம் எனக்கூறி, தேர்தல் ஆணையம் மணீைஷ நேற்று முன்தினம் மாலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, எந்த பணியிடமும் வழங்கவில்லை.அவருக்கு பதிலாக, ஓசூர் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்தை இடமாற்றம் செய்து, நள்ளிரவு, 2:00 மணிக்கு ஈரோடு மாநகராட்சி ஆணையர் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக பொறுப்பேற்றார். நேற்று காலை, தேர்தல் பிரிவில் நடந்துள்ள பணிகள், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு, கட்டுப்பாட்டு அறை, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை போன்றவற்றை பார்வையிட்டார். தேர்தல் பிரிவு அலுவலர்க-ளுடன் ஆலோசனை நடத்தினார். அத்துடன், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, தேர்தல் பார்வையாளர்களுடனும் அவர் ஆலோசனை நடத்-தினார்.பலர் மீது ஓரிரு நாளில் நடவடிக்கைஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக பணிபு-ரிந்த மணீஷ் கீழ், 40 பேர் கொண்ட குழுவினர் தேர்தல் பணி-களை கவனிக்கின்றனர். இவர்களில் வேட்பு மனுவை சரி பார்த்து, ஆவணங்கள் பெற்று சரி பார்த்தல் போன்ற பணிகளில், 15க்கும் மேற்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர். தேர்தல் ஆணையம் நேரடியாக மணீஷ் மீது நடவடிக்கை எடுத்-துள்ள நிலையில், தேர்தல் ஆணைய ஆலோசனைப்படி வேட்பு மனு பரிசீலனை மற்றும் இறுதி கட்ட பணிகளில் ஈடுபட்ட அலு-வலர்கள் மீது, ஓரிருநாளில் கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்-கப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.