/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் அருகே 2 இடங்களில் குடிநீர் கேட்டு சாலை மறியல்
/
பவானிசாகர் அருகே 2 இடங்களில் குடிநீர் கேட்டு சாலை மறியல்
பவானிசாகர் அருகே 2 இடங்களில் குடிநீர் கேட்டு சாலை மறியல்
பவானிசாகர் அருகே 2 இடங்களில் குடிநீர் கேட்டு சாலை மறியல்
ADDED : ஆக 02, 2025 01:30 AM
புன்செய்புளியம்பட்டி பவானிசாகர் அருகே இரு இடங்களில் குடிநீர் கேட்டு சாலை மறியல் நடந்தது.பவானிசாகரை அடுத்த கொத்தமங்கலம் பஞ்., பகுத்தம்பாளையம் கீராநகர் மக்களுக்கு, 10 நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த, 50-க்கும் மேற்பட்ட பெண்கள், பகுத்தம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் நேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல உத்தண்டியூர் பஞ்., எரங்காட்டூரிலும், குடிநீர் வினியோகம் இல்லை என்று, எரங்காட்டூரில், சத்தி-மேட்டுப்பாளையம் சாலையில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். பவானிசாகர் பி.டி.ஓ., இந்திராணி பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.