ADDED : செப் 22, 2024 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, காந்திஜி சாலையில், சென்ட்ரல் பனியன் மார்க்கெட் பகுதியில், ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இங்கு வி.சி., கட்சியின் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம் சார்பில் பெயர் பலகை, கொடிக்கம்பம் நடப்பட்டிருந்தது.
இதை மர்ம நபர்கள் அகற்றி மறுபடி நட்டதாக கூறியும், கொடிக்கம்பத்தை அகற்ற கூடாது என வலியுறுத்தியும், 25க்கும் மேற்பட்டோர் ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தனர். எஸ்.பி., அலுவலகம் வந்திருந்த போது கொடிகம்பம், பெயர் பலகை அகற்றப்பட்டதாக கூறி, 20க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் நேற்று மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் கோமதி, தாசில்தார் முத்து கிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். இதனால், 15 நிமிடங்களில் மறியல் முடிந்தது.