/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கள்ளிப்பட்டி மின்வாரிய கேங்மேன் மீது புகார்; நடவடிக்கை கோரி சாலை மறியல்
/
கள்ளிப்பட்டி மின்வாரிய கேங்மேன் மீது புகார்; நடவடிக்கை கோரி சாலை மறியல்
கள்ளிப்பட்டி மின்வாரிய கேங்மேன் மீது புகார்; நடவடிக்கை கோரி சாலை மறியல்
கள்ளிப்பட்டி மின்வாரிய கேங்மேன் மீது புகார்; நடவடிக்கை கோரி சாலை மறியல்
ADDED : டிச 27, 2025 07:50 AM
டி.என்.பாளையம்: கள்ளிப்பட்டி மின்வாரிய கேங்மேன் மீது நடவடிக்கை கோரி, விவசாயிகள் மற்றும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பர-பரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபி மின் பகிர்மான வட்டத்துக்கு உட்-பட்ட, டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி, இளமின் பொறியாளர் அலுவலகத்துத்து உட்பட்ட திருவள்ளுவர் நகர், சைபன் புதுார் பகுதிகளுக்கான கேங்மேனாக பணிபுரிபவர் சிவ-குமார். இவர் சரிவர பணி செய்வதில்லை.
லஞ்சம் கேட்கிறார் என்று, கள்ளிப்பட்டி பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள், பலமுறை இளமின் பொறியாளர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர். நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், விவசாயிகள் மற்றும் மக்கள் திரண்டு, கள்ளிப்பட்டி இளமின் பொறியாளர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் வந்தனர்.
பொறியாளர் விடுமுறையில் இருப்பதாக அலுவலர்கள் தெரிவிக்-கவே, அடுத்ததாக உள்ள அதிகாரியை வரச் சொல்லும்படி மக்கள் கூறினர். ஆனால் யாரும் வராத நிலையில், சத்தி-அத்தாணி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பங்களாப்புதுார் இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உதவி செயற்பொறியாளரை வரவழைத்து பேச்சு நடத்தலாம் என்று, இன்ஸ்பெக்டர் முரளிதரன் உறுதியளித்தார். இதனால் மக்கள் மறியலை கைவிட்டு, இளமின் பொறியாளர் அலுவலகத்-துக்கு சென்றனர்.
மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சங்கீதாவிடம், மறியலில் ஈடுபட்ட மக்கள் தரப்பில் புகார் மனு தரப்பட்டது. மனுவை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதன் பிறகே விவசாயிகள் மற்றும் மக்கள், மின்வாரிய அலுவல-கத்தில் இருந்து கலைந்து சென்றனர். இதனால் கள்ளிப்பட்டி பகு-தியில், மூன்று மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

