/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூர், சத்தி, தாளவாடி, டி.என்.பாளையம் வனப்பகுதிகளில் 50 கி.மீ., துாரத்துக்கு சாலை

ADDED : ஜூன் 20, 2025 12:57 AM
ஈரோடு, அந்தியூர், சத்தியமங்கலம், தாளவாடி, டி.என்.பாளையம் வனப்பகுதியில், 61.88 கோடி ரூபாயில், 49.99 கி.மீ., துார சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்தி குறிப்பு: அந்தியூர், தாளவாடி வட்டாரங்களில் வனப்
பகுதி - மலைப்பகுதியில் உள்ள, 9 குக்கிராமங்களை இணைக்கும் சாலை பணியில், 6 பணிகள் முடிந்து, 1 பணி மட்டும் நடக்கிறது. 2 பணி வரும் நிதியாண்டில் துவங்க உள்ளது. இதன்படி அந்தியூர் யூனியன் அணைப்போடு வனச்சாலை, தம்முரெட்டி வனச்சாலை, ஒன்னகரை வனச்சாலை அமைந்துள்ளது. தாமரைக்கடை, கொங்காடை முதல்
தாளக்கரை சாலைப்பணி நடந்து வருகிறது.தாளவாடி யூனியன் திம்பம் - தாளவாடி சாலை முதல் மாவநத்தம், திம்பம்-தாளவாடி சாலை முதல் காளிதிம்பம் வரை, திம்பம்-தாளவாடி சாலை முதல் ராமரணை சாலைப்பணி நிறைவு பெற்றுள்ளது. கடம்பூர் - மாக்கம்பாளையம் சாலையில் குத்தியாலத்துார் பள்ளம் ஆற்றின் குறுக்கே பாலம், சர்க்கரை பள்ளம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது வனச்சாலை அமைக்கும் பணி, 33.18 கி.மீ., நீளத்துக்கு முடிவுற்று பயன்பாட்டில் உள்ளது. 16.80 கி.மீ., நீளத்துக்கு சாலைப்பணி நடந்து வருகிறது. மொத்தமாக வனப்பகுதியில், 61.88 கோடி ரூபாயில், 49.99 கி.மீ., நீளத்துக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.