/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : ஜன 09, 2025 07:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா சாலையில், நெடுஞ்சாலை துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, உதவி கோட்ட பொறியாளர் சரவணன் முன்னிலையில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை, வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்க-ளுக்கும் வழங்கினர். வாகனங்கள் ஓட்டும்போது ெஹல்மெட் அணிவது, சீட் பெல்ட் அணிவது, சிக்னல்களை மதிப்பது, மொபைல் போன் பேசுவதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.