/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலை போக்குவரத்து தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
/
சாலை போக்குவரத்து தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 11, 2024 01:18 AM
சாலை போக்குவரத்து
தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, டிச. 11-
தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில், ஈரோடு, கரூர் சாலை, கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் தனபால் தலைமை வகித்தார்.
உதவி தலைவர் வெங்கடேசன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், மாவட்டக்குழு உறுப்பினர் மாரிமுத்து, பொது செயலாளர் கனகராஜ் கோரிக்கை குறித்து பேசினர். மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும். ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வகையில் 'அக்ரிகேட்டர்' விதிமுறை உருவாக்க வேண்டும். மேக்சிகேப் வாகனங்களை ஆம்னி பஸ் கேட்டகிரியில் கொண்டு வந்த வரிகளை உயர்த்தி வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

