ADDED : ஜூலை 31, 2024 07:15 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட நெடுஞ்சாலை துறையில், சத்தி உட்கோட்டத்தில், ஊட்டி - கோத்தகிரி - மேட்டுப்-பாளையம் - சத்தி - கோபி - ஈரோடு சாலை பணி குறித்து ஆய்வு நடந்தது.
ஈரோடு சாலை (மாநில நெடுஞ்சாலை), மூலக்கி-ணறு அருகே எருமைமடை பள்ளத்தில் பழைய குறுகிய பாலத்துக்கு பதில், 2 கோடி ரூபாயில், 4 வழிச்சாலை பாலமாக புதிதாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தை கோபி கோட்ட பொறியாளர் கங்காதரன் ஆய்வு செய்தார்.
சத்தி - அத்தாணி - பவானி சாலையில், 27 கோடி ரூபாய் மதிப்பில், 11.80 கோடி ரூபாயில் சாலையை இரு வழிச்சாலையில் இருந்து, 10 மீட்டர் அகலச்சாலையாக விரிவாக்கம் செய்யப்-பட்ட பணிகளையும் ஆய்வு செய்தனர். தேவை-யான இடங்களில் பாதுகாப்பு அம்சங்கள், ஓரங்-களில் தேவையான கூடுதல் பணி செய்ய யோசனை தெரிவிக்கப்பட்டது. உதவி கோட்ட பொறியாளர் மோகன்ராஜ் உட்பட பலர் பங்கேற்-றனர்.