/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலை பணியாளர்கள் நம்பியூரில் ஆர்ப்பாட்டம்
/
சாலை பணியாளர்கள் நம்பியூரில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 05, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர், நம்பியூர் வட்டார தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், நம்பியூர் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோபி கோட்ட செயலாளர் கருப்புசாமி தலைமை வகித்தார். கோட்ட தலைவர் முருகவேல், முருகன் முன்னிலை வகித்தனர்.
நம்பியூர் உட்கோட்ட சாலை பணியாளர்களுக்கு மாநகர ஈட்டுப்படி வழங்க வேண்டும்.
கடந்த, 2023ல் நடந்த போராட்டத்தில் விடுமுறை காலத்தை ஊதியமாக அறிவிக்க வேண்டும்,உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டகத்தில் ஈடுபட்டனர். கோட்ட பொருளாளர் முருகன், ராம்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

