ADDED : அக் 23, 2024 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், அக். 23-
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, தகுதி வாய்ந்தவர்களுக்கு சாலை ஆய்வாளர்-2ம் நிலை பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று போராட்டத்தை துவக்கினர். சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில், தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் காலையில் தொடங்கிய போராட்டம், இரவு வரை நீடித்தது.
முன்னதாக போராட்ட குழுவினரிடம், நெடுஞ்சாலை துறை அதிகாரி ராணி, மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது.
கோரிக்கை நிறைவேற்றுதல் தொடர்பான உறுதிமொழி வழங்கப்படாததால், போராட்டம் தொடரும் என்று, சாலை பணியாளர் சங்க கோட்ட செயலாளர் தில்லையப்பன் கூறினார்.