/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.5.67 கோடியில் சாலைப்பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்
/
ரூ.5.67 கோடியில் சாலைப்பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்
ரூ.5.67 கோடியில் சாலைப்பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்
ரூ.5.67 கோடியில் சாலைப்பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்
ADDED : ஜூலை 06, 2025 01:30 AM
காங்கேயம், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், படியாண்டிபாளையத்தில் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில், 2.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஈரோடு-காங்கேயம் சாலை முதல், காங்கேயம்-கொடுமுடி (படியாண்டிபாளையம் வழி) வரை, புதிய சாலை அமைக்கும் பணி; முதல்வரின் கிராமச்சாலை மேம்பாட்டு திட்டத்தில், 99.64 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசம்பாளையம் முதல் நல்லிபாளையம் வரை தார்ச்சாலை அமைக்கும் பணி; 93.56 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பூர்-படியூர் சாலை முதல் ராசாபாளையம் (ஆணைகுழிமேடு
வழி) வரை புதிய சாலை அமைக்கும் பணி; நபார்டு திட்டத்தில், 1.30 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பூர்- காங்கேயம் சாலை முதல் கந்தாம்பாளையம் வரை புதிய தார்ச்சாலை என, 5.67 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு இடங்களில் தார்ச்சாலை அமைக்கும் பணியை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்வில் காங்கேயம் ஒன்றிய தி.மு.க., செயலாளர் சிவானந்தன், அமைப்புசார ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் சண்முகசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.