ADDED : செப் 23, 2024 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: தாளவாடிமலை, தொட்டகாஜனுாரில் லட்சுமி கோவில், திகினாரையில் ரங்கநாதர் கோவில் உள்ளது. இரு கோவில்களிலும் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய நாட்களில் நடக்கும் பூஜையில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
இந்நிலையில் இரு கோவில்களிலும் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருட முயற்சி நடந்துள்ளது. கோவில் பகுதிகளிலுள்ள 'சிசிடிவி' கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஆசாமிகளை, தேடி வருகின்றனர்.