/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நகராட்சி பூங்காவில் காதல் ஜோடிகள் ஆதிக்கம்
/
நகராட்சி பூங்காவில் காதல் ஜோடிகள் ஆதிக்கம்
ADDED : ஆக 18, 2025 02:44 AM
கோபி,: கோபி நகராட்சி ஏழாவது வார்டுக்கு உட்பட்ட வடக்கு பார்க் வீதியில், பல ஆண்டுகளுக்கு முன் பூங்கா திறக்கப்பட்டது. இங்கு ராட்டினம், சீஸா. சருக்கல் மற்றும் செயற்கை நீரூற்று உள்ளது. பராமரிப்பு இல்லாததால் பறவைகளின் எச்சம் விழுந்து பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. அதேபோல் சருக்கல் கட்டமைப்பு விரிசல் விழுந்தும், ராட்டினம் கழன்றும் கிடக்கிறது.
தவிர பூங்கா வளாகத்தின் உட்பகுதியில், மதிற்சுவரை ஒட்டிய பகுதிகளை, குடிகமன்கள் திறந்த வெளிபாராக பயன்படுத்துகின்றனர். மது குடித்து விட்டு காலி மதுபாட்டில், பிளாஸ்டிக் டம்ளர்களை வீசி செல்கின்றனர்.
இத்தனை அவலத்துக்கு நடுவில்தான் பூங்காவில், காதல் ஜோடிகளின் ஆதிக்கமும் உள்ளது. இருக்கைகளில் ஜோடியாக அமர்ந்து சில்மிஷங்களில் ஈடுபடுகின்றனர்.
மரங்கள் நிறைந்த பூங்காவின் அமைதியான சூழலில், போட்டித்தேர்வுக்கு தயாராக வரும் மாணவியர் படிக்க வந்து செல்கின்றனர். காதல் ஜோடிகளால் இவர்கள் முகம் சுழிக்கின்றனர். கோபி நகராட்சி நிர்வாகம், பூங்காவை முறையாக பராமரித்து, காதலர்களின் சேட்டைகளை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.