ADDED : நவ 10, 2026 04:26 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டத்தில் மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரயில்வே காலனியில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் முன்புற பகுதி வரை, நடை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதன் கட்டுமான பணி விரைவில் நிறைவு பெற உள்ளது.
நடைமேம்பாலத்தின் மேற்புறம் மழை காலத்திலும், வெயிலிலும் பயணிகள் நனையாமலும், வெயிலால் பாதிக்காமல் இருக்கும் வகையில் கூரை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப்பணி, 10 நாட்களுக்குள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணி நிறைவு பெறும் பட்சத்தில் நடைமேம்பாலம் பயணிகளுக்கு பயனுள்ளதாக அமையும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.
