/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நம்பியூர் பகுதிகளில் சூறை காற்றுடன் மழை காற்றில் பறந்த 10 வீடுகளின் மேற்கூரை

ADDED : ஜூன் 12, 2025 01:42 AM
நம்பியூர், நம்பியூர் மற்றும் பொலவபாளையம்,காந்திபுரம், அழகாபுரி நகர், மொட்டணம், ஜீவா நகர், கள்ளிபாளையம், புது அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கடந்த இரு தினங்களாக சாரல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில் சூறை காற்றுடன் கனமழை பெய்தது.
இதில் கள்ளிபாளையம், அழகாபுரி நகர் உள்ளிட்ட பகுதிகளில், 10க்கு மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் துாக்கி வீசப்பட்டு வீட்டில் இருந்த 'டிவி', பிரிட்ஜ், வாசிங் மிஷின் உள்ளிட்ட, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானது. மேலும் கள்ளிப்பாளையம், புது அய்யம்பாளையம் பகுதிகளில், 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. ஒரு மாதத்திற்குள் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சேதமானதில், லட்சக்கணக்கான ரூபாய்க்கு மேல் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் சோகத்துடன் தெரிவித்தனர். தவிர தென்னை, வேப்பமரம், புளியமரம், அரசமரம் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட மரங்கள் கீழே சாய்ந்ததில், பல இடங்களில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டது. நேற்று மதியம் 1:00 மணிக்கு மேல் மின் இணைப்பு வழங்கப்பட்டது.