sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பறக்கும் படையால் பறிமுதல் செய்த ரூ.25.65 லட்சம் திரும்ப ஒப்படைப்பு

/

பறக்கும் படையால் பறிமுதல் செய்த ரூ.25.65 லட்சம் திரும்ப ஒப்படைப்பு

பறக்கும் படையால் பறிமுதல் செய்த ரூ.25.65 லட்சம் திரும்ப ஒப்படைப்பு

பறக்கும் படையால் பறிமுதல் செய்த ரூ.25.65 லட்சம் திரும்ப ஒப்படைப்பு


ADDED : ஜன 30, 2025 05:02 AM

Google News

ADDED : ஜன 30, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தில், 25.65 லட்சம் ரூபாயை உரிய ஆவணங்கள் அடிப்படையில் திரும்ப வழங்-கினர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக கடந்த, 7 முதல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன தணிக்கை செய்து, ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்படும் பணம், பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். கடந்த, 7 முதல் இதுவரை, 37 லட்சத்து, 24,560 ரூபாயை பறி-முதல் செய்து கருவூலத்தில் செலுத்தி இருந்தனர். உரிய ஆவணங்-களை சமர்பித்ததன் அடிப்படையில், 25 லட்சத்து, 65,060 ரூபாயை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர். மீதமுள்ள, 11 லட்சத்து, 59,500 ரூபாய் கருவூலத்தில் இருப்பு வைத்துள்ளனர்.

ரூ.1.50 லட்சம் பறிமுதல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பறக்கும் படை-யினர், வீரகவுண்டன் தலைமையில் பி.பி.அக்ரஹாரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கோவை, துடி-யலுார் எஸ்.எம்.பாளையத்தை சேர்ந்த கவுதமன் என்பவர், ஜவுளி வியாபாரம் தொடர்பாக, 1.50 லட்சம் ரூபாயை தனது ேஹாட்டா கன்சர்ன் காரில் எடுத்து வந்தார். அவரது வாக-னத்தை தணிக்கை செய்தபோது ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட, 1.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, கருவூ-லத்தில் செலுத்தினர்.






      Dinamalar
      Follow us