ADDED : ஜூன் 26, 2026 01:55 AM
அ நிறம் | அளவு
பவானி; அம்மாபேட்டையில் பிரசித்தி பெற்ற சொக்கநாத சுவாமி கோவில் உள்ளது. கோவிலில் உள்ள மூன்று உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.
இந்து சமய அற-நிலைத்துறை அந்தியூர் சரக ஆய்வாளர் சிவ-மணி, திருக்கோயில் செயல் அலுவலர் அனிதா, அறங்காவலர் தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். இதில் ரொக்கப்பணமாக, 7.91 லட்சம் ரூபாய் கிடைத்தது.
