ADDED : செப் 17, 2026 06:36 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம்
அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் உள்ள,
உண்டியல்களை திறந்து எண்ணும் பணி செயல் அலுவலர் நந்தகுமார்
தலைமையில் நேற்று நடைபெற்றது.
பரம்பரை அறங்காவலர்கள், வங்கி
அலுவலர்கள், தன்னார்வலர்கள், பக்தர்கள் பலர் காணிக்கை எண்ணும்
பணியில் ஈடுபட்டனர். 99 லட்சத்து, 17,010 ரூபாயை பக்தர்கள்
உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 262 கிராம்
தங்கம், 410 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது.
