தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தோட்டக்கலை துறையில் நுண்ணீர் பாசனம் அமைக்க 7,400 ஏக்கர் இலக்கு

தோட்டக்கலை துறையில் நுண்ணீர் பாசனம் அமைக்க 7,400 ஏக்கர் இலக்கு

தோட்டக்கலை துறையில் நுண்ணீர் பாசனம் அமைக்க 7,400 ஏக்கர் இலக்கு


ADDED : செப் 17, 2026 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 06:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை துறை சார்பில், நுண்ணீர் பாசனம் அமைக்க, 7,400 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆறு, வாய்க்கால் பாசனமாக இருந்தாலும், நீர் சிக்கனம் மற்றும் நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க நுண்ணீர் பாசனம், சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மூலம் நீர் சிக்கன மேலாண்மை கடைபிடிக்கலாம். நிலத்தடி நீராதாரங்களை அதிகம் விவசாயிகள் பயன்படுத்துவதால், நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைகிறது. அதேநேரம் குறைந்த நீராதாரம் மூலம், நீர் சிக்கனத்துடன், அதிக விளைச்சலை உறுதி செய்யலாம்.

இதுபற்றி, தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்கள், பழம், கய்கறி, வாசனை பயிர்கள், மருத்துவ பயிர்களுக்கு பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. குறிப்பாக வாழை, கொய்யா, மா, பப்பாளி, நெல்லி, மஞ்சள், மரவள்ளி, தென்னை, பாக்கு, வெங்காயம், தக்காளி, கத்திரி, வெண்டை, பீர்க்கன் காய், பாகற்காய், புடலை, தர்பூசணி உள்ளிட்ட பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க, 7,400 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியத்தில் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர் பாசன நிறுவனங்கள் மூலம் அமைத்து தரப்படும்.

சொட்டு நீர் பாசனம் அமைத்து, 7 ஆண்டுகள் நிறைவு பெற்ற விவசாயிகளின் வயல்

களுக்கு மீண்டும் இத்திட்டத்தின் கீழ், மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்து தரப்படும். நடப்பு பருவத்தில், 5,000 விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைத்து கொடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us